/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்துாரில் பலத்த மழை
/
ஸ்ரீவில்லிபுத்துாரில் பலத்த மழை
ADDED : மே 14, 2024 12:27 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று மதியம் 3:30 மணி முதல் இடியுடன் கூடிய பலத்த சாரல் மழை பெய்ததால் குளிர்ந்த சூழல் ஏற்பட்டது.
நேற்று காலை 10:00 மணி முதல் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்பட்ட நிலையில் மதியம் 2:15 மணிக்குமேல் வெயிலின் தாக்கம் குறைந்து வெயில் இல்லாத இதமான தட்பவெப்ப சூழல் ஏற்பட்டது.
மதியம் 3:30 மணி முதல் நகரை மிரட்டும் இடியுடன் பலத்த சாரல் மழை, சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக பெய்தது. அதனையடுத்து மாலை 5:30 மணியை கடந்தும் லேசான சாரல் மழை பெய்து, குளிர்ந்த சூழலை ஏற்படுத்தியது.
ராஜபாளையம்: நேற்று மதியம் 2:50 மணிக்கு பலத்து காற்று இடியுடன் இரண்டு மணி நேர மழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
தொடர்ந்து வெப்பம் வாட்டி வந்த நிலையில் பகல் நேரம் பெய்த மழையால் மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து மீண்டனர்.

