/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை; ஓடைகளில் நீர் வரத்து; மக்களுக்கு தடை
/
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை; ஓடைகளில் நீர் வரத்து; மக்களுக்கு தடை
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை; ஓடைகளில் நீர் வரத்து; மக்களுக்கு தடை
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை; ஓடைகளில் நீர் வரத்து; மக்களுக்கு தடை
ADDED : மே 19, 2024 11:47 PM

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக பாப்பனத்தம்மன் கோயில் ஆறு மற்றும் மலையடிவார ஓடைகளில் மழைநீர் காட்டாற்று வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.
பிளவக்கல், செண்பகதோப்பு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மக்கள் சுற்றுலா செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.
மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலையியல் துறை எச்சரிக்கையை தொடர்ந்து சதுரகிரி உட்பட மலைக்கோயில்களுக்கு மக்கள் செல்ல வனத்துறை தடை விதித்தது.
இந்நிலையில் நேற்று மதியம் 3:00 மணிக்கு மேல் மாலை 5:00 மணி வரை சதுரகிரி மலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையின் காரணமாக பாப்பனத்தம்மன் கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காட்டாற்று வெள்ளமாக மழைநீர் ஓடியது. சாப்டூர் வனச்சரகர் செல்லமணி மற்றும் வனத்துறையினர் கண்காணித்தனர். பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணை மலைப்பகுதியில் நேற்றிரவு 6:30 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. அணைப்பகுதியை வனச்சரகர் பிரபாகர் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று பகலில் லேசான சாரல் மழை பெய்தது. காட்டழகர் கோயிலுக்கு சென்ற மக்களை வனத்துறையினர் பாதுகாப்பாக அழைத்து வந்தனர். நீர்வரத்து அதிகமுள்ள இடங்களை வனச்சரகர் கார்த்திக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். மலைப்பகுதிகள் மற்றும் நீர்வரத்து அதிகமுள்ள ஓடைகளுக்கு பொதுமக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

