/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டி நான்கு வழிச்சாலையில் உயர் கோபுர மின் விளக்குகள்
/
காரியாபட்டி நான்கு வழிச்சாலையில் உயர் கோபுர மின் விளக்குகள்
காரியாபட்டி நான்கு வழிச்சாலையில் உயர் கோபுர மின் விளக்குகள்
காரியாபட்டி நான்கு வழிச்சாலையில் உயர் கோபுர மின் விளக்குகள்
ADDED : ஜூன் 27, 2024 05:49 AM

காரியாபட்டி : இருளாக கிடந்த மதுரை தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
காரியாபட்டியில் மதுரை தூத்துக்குடி நான்கு வழிச் சாலை கள்ளிக்குடி பிரிவு ரோடு இருளாக கிடந்தது. இரவு நேரங்களில் அதிவேகமாக வரும் வாகனங்களால் ரோட்டை கடக்க முடியாமல் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். அங்கு உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து ஒன்றிய அலுவலகம் சார்பாக நிதி ஒதுக்கப்பட்டு அங்கு உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. இரவு நேரங்களில் வாகனங்கள் வருவதை அறிந்து மக்கள் எளிதில் ரோட்டை கடக்க முடிந்தது. நாளடைவில் உயர் கோபுர மின் விளக்கு சேதம் அடைந்து, எரியாமல் இருளில் மூழ்கியது.
இதனால் இரவு நேரங்களில் ரோட்டை கடக்க மக்கள் படாதபாடுபட்டனர். அடிக்கடி விபத்து ஏற்பட்டது. இதையடுத்து நான்கு வழிச்சாலையில் உயர் கோபுரம் மின் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. எதிரொலியாக பேரூராட்சி சார்பாக 4 சோலார் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டது. பேரூராட்சிக்கும், தினமலர் நாளிதழுக்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.