/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உயர்கல்வி: மாணவர் குறைதீர் முகாம்
/
உயர்கல்வி: மாணவர் குறைதீர் முகாம்
ADDED : ஜூன் 14, 2024 04:21 AM
விருதுநகர்: விருதுநகரில் பிளஸ் 2 முடித்து உயர்கல்வி சேர சிரமப்படும் மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது.
கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்து ஒவ்வொரு மாணவர்களின் குறைகளை தனித்தனியாக கேட்டறிந்தார். திருச்சுழி எம்.ரெட்டியபட்டியை சேர்ந்த பெருமாள் ராஜா என்ற மாற்றுத்திறனாளி மாணவருக்கு ஆங்கில வழியில் தேர்வு எழுதுபவர் இல்லாததால் கல்லுாரியில் சேர்க்க மறுப்பதாக மனு அளித்தார்.
உடனடியாக கல்லுாரியில் சேர ஏற்பாடு செய்யப்பட்டது. அதே போல் சிவகாசி பெரியவாடியூரை சேர்ந்த அரசு பள்ளி மாணவர் சுகஸ்ரீ ஜெயராம் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 531 மதிப்பெண் பெற்ற நிலையில் சென்னையில் ஒரு கல்லுாரியில் இடம் கிடைத்த நிலையில் பொருளாதார உதவி கோரி மனு அளித்தார்.
அதற்கும் மாவட்ட நிர்வாகம் தேவையான உதவிகள் செய்வதாக உறுதி அளித்தது. இதே போல் ஒற்றை பெற்றோராக இருப்போர் தங்கள் பிள்ளைகளின் கல்விக்கு பொருளாதார உதவி குறித்தும், அறியாமையால் கல்லுாரிக்கு விண்ணப்பிக்க தாமதமான மாணவர்கள் உதவி கோரியும் மனு அளித்தனர். அதன் மீதும் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்தார். முதன்மை கல்வி அலுவலர் வளர்மதி, மாவட்ட வழங்கல் அலுவலர் அனிதா உடனிருந்தனர்.