/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தீப்பெட்டி, பட்டாசு தொழிலை பாதுகாக்க முழு முயற்சி எடுப்பேன்
/
தீப்பெட்டி, பட்டாசு தொழிலை பாதுகாக்க முழு முயற்சி எடுப்பேன்
தீப்பெட்டி, பட்டாசு தொழிலை பாதுகாக்க முழு முயற்சி எடுப்பேன்
தீப்பெட்டி, பட்டாசு தொழிலை பாதுகாக்க முழு முயற்சி எடுப்பேன்
ADDED : ஏப் 06, 2024 04:19 AM
சாத்துார், : தீப்பெட்டி, பட்டாசு தொழிலை பாதுகாக்க முழு முயற்சி எடுப்பேன்., என விருதுநகர் லோக்சபா தொகுதி தே.மு.தி.க.,வேட்பாளர் விஜயபிரபாகரன் தெரிவித்தார்.
சாத்துார் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில் நேற்று வாழ வந்தாள் புரத்தில் தனது பிரசாரத்தை துவக்கி அவர் கூறியதாவது:
எனக்கு சொந்த ஊர் ராமானுஜபுரம் நான் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவன். உங்கள் வீட்டுப் பிள்ளை.
எனது அப்பா விஜயகாந்த்க்கு நீண்ட நாளாக ஒரு ஆசை கனவு இருந்தது. லோக்சபாவில் தே.மு.தி.க சார்பில் ஒரு எம்.பி., ஆவது இருக்க வேண்டும் ஆசைப்பட்டார். எனது அப்பாவின் ஆசையை நிறைவேற்ற நீங்கள் எனக்கு ஓட்டு போடவேண்டும்.
இந்தப் பகுதியில் முக்கிய தொழிலாக தீப்பெட்டி, பட்டாசு தொழில்கள் உள்ளது.
இதுவே மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது தீப்பெட்டி, பட்டாசு தொழிலை பாதுகாக்க முழு முயற்சி எடுப்பேன். ஆறு சட்டசபை தொகுதியிலும் எம்.பி., அலுவலகம் அமைக்கப்படும். சாத்துார், சிவகாசியில் வீடு எடுத்து உங்களுடன் தங்கியிருந்து மக்கள் பணியாற்றுவேன் என்றார்.

