/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தீப்பெட்டி பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்காக பாடுபடுவேன்
/
தீப்பெட்டி பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்காக பாடுபடுவேன்
தீப்பெட்டி பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்காக பாடுபடுவேன்
தீப்பெட்டி பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்காக பாடுபடுவேன்
ADDED : ஏப் 11, 2024 06:35 AM
சாத்துார் : தீப்பெட்டி பட்டாசு ஆலை தொழிலாளர்களின் குரலாக நாடாளுமன்றத்தில் எனது குரல் ஒலிக்கும் , என தே.மு.தி.க.,., வேட்பாளர் விஜய பிரபாகரன் சாத்துாரில் தெரிவித்தார்.
சாத்துார் ஊராட்சி ஒன்றியம் அனுப்பங்குளம், சின்னக் காமன்பட்டி, மேட்டமலை, வெங்கடாசலபுரம் , படந்தால், ஓ. மேட்டுப்பட்டி, ஏழாயிரம்பண்ணை செவல்பட்டி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
விஜயபிரபாகரன் பிரசாரத்தின் போது கூறியதாவது: எம்.ஜி.ஆர்.ஜெ., விஜயகாந்த் ஆகியோர் மக்களை நேசித்த தலைவர்கள். மூவருமே ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கி மக்களுக்காகவே வாழ்ந்த தலைவர்கள் ஆவார்கள். உங்கள் வீட்டு பிள்ளையாக என்னை கருதி நீங்கள் ஓட்டு போட்டு வெற்றி பெற வைக்க வேண்டும். உங்களை நான் தங்கத்தட்டில் வைத்து தாங்குவேன்.
தீப்பெட்டி பட்டாசு ஆலை தொழிலாளர்களின் குரலாக நாடாளுமன்றத்தில் எனது குரல் ஒலிக்கும். சிவகாசி சாத்துாரில் தங்கி இருந்து மாதம் பத்து முதல் 15 நாள் உங்களுடன் தங்கி இருந்து உங்களுக்கு சேவை புரிவேன் என்றார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

