/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இடையன்குளம் காக்கிவாடன்பட்டி ரோடு சேதம்: வாகன ஓட்டிகள் அவதி
/
இடையன்குளம் காக்கிவாடன்பட்டி ரோடு சேதம்: வாகன ஓட்டிகள் அவதி
இடையன்குளம் காக்கிவாடன்பட்டி ரோடு சேதம்: வாகன ஓட்டிகள் அவதி
இடையன்குளம் காக்கிவாடன்பட்டி ரோடு சேதம்: வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜூலை 02, 2024 06:21 AM

சிவகாசி : சிவகாசி அருகே இடையன்குளத்திலிருந்து பூசாரி பட்டி வழியாக காக்கி வாடன்பட்டி செல்லும் ரோட்டை சீரமைக்க வேண்டும் எனமக்கள் விரும்புகின்றனர்.
சிவகாசி அருகே இடையன்குளத்திலிருந்து பூசாரி பட்டி வழியாக காக்கி வாடன்பட்டி மூன்று கிலோமீட்டர் துாரத்தில் உள்ளது. எம்.துரைச்சாமிபுரம் இடையன்குளம் நதிக்குடி உள்ளிட்ட பகுதி மக்கள் வெம்பக்கோட்டை, சாத்துார் செல்வதற்கு பூசாரிப்பட்டி, காக்கி வாடன்பட்டி வழியாக செல்வர்.
அதேபோல் காக்கி வாடன்பட்டி பகுதி மக்கள் மல்லி, ஸ்ரீவில்லிபுத்துார் செல்வதற்கு பூசாரிப்பட்டி வழியாக செல்ல வேண்டும். பூசாரிபட்டி வழியாக காக்கி வாடன்பட்டி செல்லும் ரோடு பத்து ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
தற்போது ரோடு முற்றிலும் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டது. மழைக்காலங்களில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுகின்றது. இப்பகுதியில் விவசாய நிலங்கள் பட்டாசு ஆலைகள் உள்ளன. விவசாய காலங்களில் உரங்களைக் கொண்டு செல்வதற்கும் விளைபொருட்களை ஏற்றி வருவதற்கும் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
ரோடு சேர்த்தால் வெம்பக்கோட்டை சாத்துார் செல்வதற்காக இப்பகுதி மக்கள் சிவகாசி வழியாக சுற்றிச் செல்ல வேண்டி உள்ளது. எனவே இப்பகுதியில் சேதம் அடைந்த ரோட்டினை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.