/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மயானத்தில் அடிப்படை வசதி நிறைவேற்றம்
/
மயானத்தில் அடிப்படை வசதி நிறைவேற்றம்
ADDED : மே 30, 2024 02:59 AM
காரியாபட்டி: மல்லாங்கிணர் பேரூராட்சி வளையங்குளத்தில் தினமலர் செய்தி எதிரொலியாக மயானத்தில் அடிப்படை வசதிகள் செய்ய நிதி ஒதுக்கி, பணிகள் நடைபெற்று வருவதால், அக்கிராமத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
மல்லாங்கிணர் பேரூராட்சி வளையங்குளத்தில் மயானத்திற்கு ரோடு வசதி கிடையாது. எரிமேடை, சுற்றுச்சுவர், தண்ணீர் தொட்டி, நிழற்குடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். விபத்துக்களில் இறப்பவர்களை ஆம்புலன்ஸில் கொண்டு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். மழை நேரங்களில் சேரும் சகதியுமாக இருக்கும். ரோடு வசதி, மயானத்தில் அடிப்படை வசதி கேட்டு மக்கள் கோரிக்கை விடுத்தனர். எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து மயானத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. செய்தி எதிரொலியாக நீண்ட நாள் கோரிக்கையான மயானத்தில் சுற்றுச்சுவர், எரிமேடை, நிழற்குடை, தண்ணீர் தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ய ரூ. 18 லட்சம் ஒதுக்கீடு செய்து தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.