/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குடிநீர், ரோடு வசதிக்கு முக்கியத்துவம்
/
குடிநீர், ரோடு வசதிக்கு முக்கியத்துவம்
ADDED : பிப் 23, 2025 06:17 AM
காரியாபட்டி : குடிநீர், ரோடு உள்ளிட்ட பிரத்யேக திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அதிகாரிகளின் ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.
காரியாபட்டியில் நரிக்குடி, திருச்சுழி, காரியாபட்டி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அரசுத்துறை அதிகாரிகளின் ஆய்வு கூட்டம், கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.
இதில் பங்கேற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு, செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைவுபடுத்தி குறிப்பாக குடிநீர், ரோடு, தெருவிளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் பொதுமக்களிடம் பெறப்படும் குறைகள் உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். பத்திரிக்கை மூலம் பெறப்படும் குறைகளையும் உடனடியாக செயல்படுத்த வேண்டும். ரோடு மேம்பாடு திட்டத்தின் கீழ் மேம்படுத்துவதற்கு இயலாத அதிக நீளமான ரோடுகளை பிற திட்டங்கள் மூலம் நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். குடிநீர் வினியோகம் தொடர்பாக ஊரக வளர்ச்சித் துறை குடிநீர் வடிகால் வாரியம் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றார்.