/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பொறுப்பேற்ற 500 நாட்களில் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு பா.ஜ., வேட்பாளர் ராதிகா பேட்டி

ADDED : ஏப் 18, 2024 05:05 AM
விருதுநகர்: மாநில தலைவர் அண்ணாமலை கூறியது போல் 500 நாட்களில் சிறிய சிறிய அடிப்படைபிரச்னைகளுக்கு தீர்வு காண்பேன் என விருதுநகரில் பா.ஜ., வேட்பாளர் ராதிகா கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: தொகுதியின் அனைத்து தரப்பு மக்களை சந்தித்தேன். அவர்களது கஷ்டங்களை அறிந்து கொண்டேன். குடிநீர், வாறுகால் உள்ளிட்ட சாதாரண விஷயங்களை கூட ஆட்சியாளர்கள் நிறைவேற்றாமல் உள்ளனர்.
எதையும் நுாறு சதவீதம் தர வேண்டும் என்பதே என் எண்ணம். அதற்காக தான் அரசியலுக்கு வந்துள்ளேன். மாநில தலைவர் அண்ணாமலை கூறியது போல் 500 நாட்களில் சிறிய சிறிய அடிப்படைபிரச்னைகளுக்கு தீர்வு காண்பேன். சிறப்பாக செயல்பட மக்கள் வாய்ப்பு தருவர் என்று நம்புகிறேன். சுத்தமான பசுமையான தொகுதியாக விருதுநகர் தொகுதியை மாற்றுவேன்.
ஜல் ஜீவன் திட்டத்தில்உள்ளாட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படவில்லை. இதுவும் குடிநீர் பிரச்னைக்கு ஒரு காரணம். வரிபாக்கி பிரச்னையை நாங்கள் மறைக்கவில்லை. மார்ச் 31 வரை கால அவகாசம் இருந்ததால் அதை முறைப்படி செலுத்தி விட்டோம்.
10 ஆண்டுகளாக இங்கு எதிர்க்கட்சிகளின் எம்.பி., தான் இருந்துள்ளனர். நாங்கள் ஆளுங்கட்சி எம்.பி., ஆக இருந்து நிறைய நல்ல விஷயங்களை கொண்டு வருவோம். முன்னேற துடிக்கும் மாவட்டம் என்பதால் நிறைய திட்டங்கள் வந்துள்ளது. ஆனால் அதை முந்தைய எம்.பி.,க்கள் சரியாக பயன்படுத்தினரா என தெரியவில்லை. நாங்கள் வந்தால் அதை சரியாக மக்களிடம் கொண்டு செல்வோம் என்றார்.