/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கிராம பகுதிகளில் ரேஷன் அரிசி கிலோ ரூ.3க்கு விற்பனை
/
கிராம பகுதிகளில் ரேஷன் அரிசி கிலோ ரூ.3க்கு விற்பனை
கிராம பகுதிகளில் ரேஷன் அரிசி கிலோ ரூ.3க்கு விற்பனை
கிராம பகுதிகளில் ரேஷன் அரிசி கிலோ ரூ.3க்கு விற்பனை
ADDED : ஜூலை 04, 2024 12:54 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் ரேஷன் அரிசியை வாங்கி மக்கள் கிலோ 3 ரூபாய்க்கு விற்கின்றனர்.
அருப்புக்கோட்டையை சுற்றியுள்ள கிராமங்களில் 20க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இங்கு மக்களுக்கு தேவையான இலவச அரிசி, கோதுமை, சீனி, பாமாயில் விநியோகம் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு கார்டு தாரர்களுக்கும் தல 5 கிலோ முதல் 20 கிலோ வரை அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இது தவிர அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 35 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.
கிராமப் பகுதிகளில் விநியோகிக்கப்படும் இலவச அரிசியை கார்டுதாரர்கள் வாங்கி வீட்டில் இருப்பு வைக்கின்றனர். ரேஷன் அரிசிகளை வாங்கி கடத்துபவர்கள் கிராமப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று அரிசியை கிலோ 3 ரூபாய் முதல் 3.50 கொடுத்து வாங்குகின்றனர்.
அரிசியை கார்டுதாரர்கள்வாங்கவில்லை என்றாலும் அவை மொத்தமாக கடத்தப்படுகிறது. இதில் கெடுபிடி ஏற்படுகிற போது, கிராமங்களுக்கு சென்று அரிசியை விலை கொடுத்து வாங்குவதால் ரேஷன் கார்டுதாரர்கள் அரிசியை பயன்படுத்தாவிட்டாலும் கூட அதை வாங்கி இருப்பு வைத்து விற்கின்றனர்.
இதுகுறித்து ரேஷன் அரிசியை பிடிக்கும் பறக்கும் படையினர் கிராம பகுதிகளுக்கு சென்று அரசு வழங்கும் இலவச அரிசியை விற்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.