/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் மாலை வெயிலுடன் வெளுத்து வாங்கிய மழை
/
மாவட்டத்தில் மாலை வெயிலுடன் வெளுத்து வாங்கிய மழை
ADDED : ஆக 15, 2024 04:49 AM

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மாலை நேரத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால் மாணவர்கள் கடும் சிரமத்துடன் வீடு திரும்பினர்.
நேற்று காலை முதலே விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெப்பச்சலன வெயில் அடித்தது. இதே சூழல் மதியமும் தொடர்ந்தது.
மாலை மேகமூட்டம் காணப்பட்டது. பின் கலைந்து இதமான வெயிலுடன் கூடிய மழை மாலை 5:30 மணி முதல் 6:40 மணி வரை கொட்டி தீர்த்தது.
ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் பகுதிகளில் மதியம் 3:00 மணி முதலே பலத்த சாரலுடன் மழை கொட்டி தீர்த்தது.
அதை தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு பிறகு காரியாபட்டி, அருப்புக்கோட்டை, சாத்துாரிலும் சாரல் மழை கொட்டி தீர்த்தது.
மாலை நேரத்தில் மழை பெய்ததால் பள்ளி மாணவர்கள் வீடு திரும்ப சிரமப்பட்டனர்.
மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். முக்கிய வீதிகளில் மழைநீர் தேங்கி நீண்ட நேரம் கழித்து வடிந்தது.
விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் வடிகால்களை துார்வாரததால் மிகுந்த சேதம் ஏற்பட்டது.