/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் செயல்படாத பசுமை உர குடில்கள் உரம் தயாரிக்கப்படாததால் வருவாய் இழப்பு
/
சிவகாசியில் செயல்படாத பசுமை உர குடில்கள் உரம் தயாரிக்கப்படாததால் வருவாய் இழப்பு
சிவகாசியில் செயல்படாத பசுமை உர குடில்கள் உரம் தயாரிக்கப்படாததால் வருவாய் இழப்பு
சிவகாசியில் செயல்படாத பசுமை உர குடில்கள் உரம் தயாரிக்கப்படாததால் வருவாய் இழப்பு
ADDED : மார் 02, 2025 06:09 AM
சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் நுண் உர குடில்கள் செயல்படாமல், குப்பையை தீ வைத்து எரிப்பதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மேலும் உரம் தயாரிக்கப்படாததால் வருவாயும் பாதிக்கப்படுகிறது.
சிவகாசி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பையிலிருந்து உரம் தயாரிப்பதற்காக விஸ்வநத்தம் மார்க்கெட் வளாகம், பி.கே.எஸ்.ஏ., ஆறுமுகம் ரோடு, வெம்பக்கோட்டை ரோடு, வேலாயுத ரஸ்தா உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட இடங்களில் பசுமை உரக் குடில்கள் அமைக்கப்பட்டது. தற்போது இந்த பசுமை குடில்களில் ஒரு சில மட்டுமே இயங்கி வருகிறது.
இந்நிலையில் 2022 ஏப்., முதல் சிவகாசி மாநகராட்சியில் துாய்மை பணிகள் தனியார் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூ.8.5 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டு உள்ளது. தனியார் ஒப்பந்த நிறுவன பணியாளர்கள் குப்பையை தரம் பிரிக்காமல் அவ்வப்போது பொது இடங்களில் கொட்டி தீ வைப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், பசுமை உர குடில்கள் செயல்படாமல் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படாமல் முடங்கியுள்ளது.
கடந்த காலங்களில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் குப்பையில் இருந்து உரம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் மாநகராட்சிக்கு வருவாய் கிடைத்து வந்தது. மாடித் தோட்டம், வீட்டு தோட்டம் வைத்துள்ளவர்கள் குறைந்த விலையில் உரம் வாங்கிக் கொண்டனர். தவிர விவசாயிகளுக்கும் உரங்கள் விற்பனை செய்யப்பட்டது. எனவே பசுமை உரக் குடில்களை மீண்டும் முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்: மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பசுமை உரக் குடில்களை சீரமைத்து குப்பையில் இருந்து உரம் தயாரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, என்றனர்.