நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் லயன்ஸ் சர்வதேச பள்ளியில் மாணவர் தலைவர்கள் பதவியேற்பு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் வெங்கடாசலபதி தலைமை வகித்தார். முதல்வர் சிவக்குமார், துணை முதல்வர் பாண்டீஸ்வரி முன்னிலை வகித்தனர். மாணவி சஞ்சனா வரவேற்றார். பள்ளி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் வாழ்த்தினர். மாணவர் தலைவராக கீர்த்தி வாசன், துணை தலைவராக அகில்குமார், மாணவி தலைவியாக கற்பக நிகிதா, துணைத் தலைவியாக மகாலட்சுமி ஆகியோர் பதவியேற்று உறுதிமொழி எடுத்தனர். விழாவில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.