/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் 6 கிராமப்புற சட்ட உதவி மையங்கள் துவக்கம்
/
மாவட்டத்தில் 6 கிராமப்புற சட்ட உதவி மையங்கள் துவக்கம்
மாவட்டத்தில் 6 கிராமப்புற சட்ட உதவி மையங்கள் துவக்கம்
மாவட்டத்தில் 6 கிராமப்புற சட்ட உதவி மையங்கள் துவக்கம்
ADDED : செப் 03, 2024 05:06 AM
ஸ்ரீவில்லிபுத்தூர், : விருதுநகர் மாவட்டத்தில் கிராமப்புற மக்களும் எளிதில் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு சார்பில் ஆறு கிராமப்புற சட்ட உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இன்றைய சமூகத்தில் ஏழைகள் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவும் வகையில் தேசிய, மாநில, மாவட்ட அளவில் சட்டப்பணிகள் ஆணைக்குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது
இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சிவில், குடும்ப நலம், வங்கி கடன், குற்றவியல் வழக்குகள் நடத்துதல், ஜாமினில் வெளிவருதல், வழக்குகளை நேரடியாக கோர்ட் முறையில் அல்லாமல் சமரசத் தீர்வு மூலம் தீர்வு காண்பது, பெண்கள், குழந்தைகள் உரிமைகளை தெரிந்து கொள்ளுதல், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, காசோலைகள் கொடுக்கல், வாங்கல் ஏற்படும் பிரச்சினைகள், தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு இந்த அமைப்பின் மூலம் தீர்வு காணப்படுகிறது.
இந்நிலையில் கிராமப்புற மக்களும் சிரமமின்றி தங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண உதவும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் கிராமப்புற சட்ட உதவி மையங்கள் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இதன்படி ஸ்ரீவில்லிபுத்தூரில் படிக்காசு வைத்தான்பட்டி, வத்திராயிருப்பில் கோட்டையூர், சாத்தூரில் ஏழாயிரம்பண்ணை, அருப்புக்கோட்டையில் எம்.ரெட்டியபட்டி, விருதுநகரில் மன்னார்கோட்டை, சிவகாசியில் நாரணபுரம் ஆகிய இடங்களில், திங்கள், புதன்,வெள்ளிக்கிழமைகளில் காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை இந்த கிராமப்புற சட்ட உதவி மையங்கள் செயல்பட்டு வருகிறது.