/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., நீர் மோர் பந்தல் திறப்பு
/
தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., நீர் மோர் பந்தல் திறப்பு
தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., நீர் மோர் பந்தல் திறப்பு
தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., நீர் மோர் பந்தல் திறப்பு
ADDED : மே 02, 2024 04:57 AM

சிவகாசி,: சிவகாசி திருத்தங்கல் பகுதியில் பல்வேறு இடங்களில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
திருத்தங்கலில் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமை வகித்து நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். தொடர்ந்து மக்களுக்கு இளநீர், ரோஸ்மில்க், சர்பத், மோர், தர்பூசணி பழம் வழங்கினார். மண்டல செயலாளர்கள், நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.
சிவகாசி, திருத்தங்கலில் தி.மு.க., சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. மாநகர செயலாளர் உதயசூரியன் மேயர் சங்கீதா, தலைமை வகித்து துவக்கி வைத்தனர். மக்களுக்கு இளநீர் மோர் ரோஸ் மில்க் சர்பத் தர்பூசணி பழம் வழங்கப்பட்டது.
முன்னாள் நகர் தலைவர் பொன் சக்திவேல், கவுன்சிலர்கள் குருசாமி, சேதுராமன், சரவணகுமார், செல்வம், இந்திரா தேவி கட்சியினர் கலந்து கொண்டனர்.
பா.ஜ., சார்பில் பள்ளபட்டி செங்கமல நாச்சியார் ஊராட்சியில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. மாவட்ட தலைவர் சரவண துரைராஜா திறந்து வைத்தார்.
மக்களுக்கு மோர், தர்பூசணி பழம், சர்பத் வழங்கப்பட்டது. நகர தலைவர் முருகேசன் மாவட்ட செயலாளர் விஜயராகவன், கட்சியினர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை ஒன்றிய தலைவர் சிவசெல்வராஜ் செய்தார்.

