/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்துாரில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
/
ஸ்ரீவில்லிபுத்துாரில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
ஸ்ரீவில்லிபுத்துாரில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
ஸ்ரீவில்லிபுத்துாரில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
ADDED : மே 28, 2024 05:41 AM
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகத்தில் கோடை பருவ நெல் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு அரசு நுகர்வோர் வாணிப கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழையின் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு தாலுகாவில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு தற்போது அறுவடை நடந்து வருகிறது. இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து மடவார்வளாகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் நேற்று காலை திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. கொள்முதல் அலுவலர் சிவக்குமார்,, பட்டியல் எழுத்தர் செந்தில்குமார், உதவியாளர்கள் கார்த்திக் குமார், ராணி, பெரியகுளம் கண்மாய் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மோகன்ராஜ், நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் முனீஸ்வரன் சட்ட ஆலோசகர் ரமேஷ் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் நெல் அறுவடை துவங்கியுள்ள நிலையில் கொள்முதல் நிலையம் துவங்கியிருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.