/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புளியங்குளத்தில் பள்ளி கட்டடங்கள் திறப்பு
/
புளியங்குளத்தில் பள்ளி கட்டடங்கள் திறப்பு
ADDED : ஜூலை 20, 2024 12:14 AM
நரிக்குடி : நரிக்குடி ப.புளியங்குளத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
ப.புளியங்குளம் பள்ளியில் குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 31 லட்சத்து 83 ஆயிரம்மதிப்பில் கூடுதலாக இரண்டு வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டது. கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்கு தயாராக இருந்தது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக நேற்று காலை திறந்து வைத்தார். கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார்.
ஊராட்சித் தலைவர் ரேவதி முன்னிலை வைத்தார். ஒன்றிய தலைவர் காளீஸ்வரி, பி.டி.ஓ.,கள் ஜெயபுஷ்பம், சண்முகப்பிரியா, ஏ.பி.ஓ.,கள் அலமேலு அம்மாள், ரகுநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

