/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோசல்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு; திணறும் வாகன ஓட்டிகள்
/
ரோசல்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு; திணறும் வாகன ஓட்டிகள்
ரோசல்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு; திணறும் வாகன ஓட்டிகள்
ரோசல்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு; திணறும் வாகன ஓட்டிகள்
ADDED : ஆக 09, 2024 12:21 AM
விருதுநகர்: விருதுநகரில் இருந்து மல்லாங்கிணர் செல்லும் ரோட்டின் ரோசல்பட்டி பகுதியில் ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. இதனால் ரோட்டின் அகலம் குறுகி வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
விருதுநகரில் இருந்து மல்லாங்கிணர் செல்லும் ரோடு ரோசல்பட்டி பகுதியின் வழியாக செல்கிறது. ஊராட்சி பகுதியாக இருந்தாலும் நகராட்சிக்கு அருகே இருப்பதால் இங்கு குடியிருப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ரோசல்பட்டி, பாண்டியன் நகர், அதை சுற்றிய பகுதிகளில் வசிப்பவர்கள் தங்களின் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க விருதுநகர் - மல்லாங்கிணர் ரோட்டிற்கு வருகின்றனர். இங்கு ரோட்டின் இருபுறமும் உணவகங்கள், இறைச்சி, வணிக கடைகளின் எண்ணிக்கை உயர்ந்து ஆக்கிரமிப்புகளும் அதிகரித்துள்ளது.
இப்பகுதியில் இருபுறமும் உள்ள கடைகள், தங்களின் தேவைக்கு ஏற்ப கடையின் முன்பு பந்தல், சீட் அமைத்துள்ளனர். வாடிக்கையாளர்களின் நிழலிற்காக என தங்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்ள நினைக்கின்றனர். இதில் பல கடைகள் ரோடு வரை ஆக்கிரமித்து பொருட்களை வைத்து விற்பனை செய்கின்றனர்.
வாகனங்களில் வரும் வாடிக்கையாளர்கள் நிறுத்த இடமில்லாமல் ரோட்டில் நிறுத்துகின்றனர். இதனால் மல்லாங்கிணர், காரியப்பட்டி பகுதிகளுக்கு செல்லும் பஸ், கார், வேன் ஆகியவை நெரிசலில் சிக்கி ஊர்ந்து செல்ல வேண்டியுள்ளது.
இப்பகுதியில் காலை, மாலை, இரவு நேரத்தில் அதிக போக்குரவத்து நெரிசல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ்கள் கூட முன்னேறி செல்ல முடியாத நிலை நீடிக்கிறது. ஊராட்சி பகுதியாக இருப்பதால் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகளை உள்ளாட்சி நிர்வாகத்தினர் கண்டும் காணாமல் உள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் ரோசல்பட்டி பகுதியில் ரோட்டின் இருபுறத்திலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வாகனங்கள், ஆம்புலன்ஸ் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.