/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மேற்கு தொடர்ச்சி மலையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
/
மேற்கு தொடர்ச்சி மலையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
மேற்கு தொடர்ச்சி மலையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
மேற்கு தொடர்ச்சி மலையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
ADDED : பிப் 22, 2025 07:01 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஏப்.15 வரை மலையேற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
2024 நவம்பர் முதல் மேகமலை புலிகள் காப்பகத்தின் ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத்தோப்பு முதல் வ.புதுப்பட்டி வரை 9 கிலோமீட்டர் துாரம் வனத்துறையினர் மூலம் மலையேற்றம் அழைத்துச் செல்லும் திட்டம் துவங்கப்பட்டது. விருதுநகர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி பல்வேறு வெளிமாவட்ட மக்களும் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து மலையேற்றம் சென்று வந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் மலையில் அதிகரிக்க துவங்கியுள்ளதால் மாநிலம் முழுவதும் மலையேற்றம் செல்வதை ஏப்ரல் 15 வரை நிறுத்தி வைக்க அரசு அறிவுறுத்தியது.
அதன்படி ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்திலும் மலையேற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் கூறினார்.