/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராஜபாளையத்தில் அதிகரிக்கும் பிளக்ஸ்
/
ராஜபாளையத்தில் அதிகரிக்கும் பிளக்ஸ்
ADDED : ஆக 28, 2024 05:09 AM

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் நகர் பகுதி நடுவே உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையை மறைத்து வைக்கப்படும் பிளக்ஸ் போர்டுகள் நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகளால் மக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா அருகே அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனை செயல்படுகிறது. நகர் பகுதி நடுவே தேசிய நெடுஞ்சாலை ஒட்டி உள்ள மருத்துவ மனையை மறைத்து அரசியல் கட்சியினர் பிளக்ஸ் விளம்பர போர்டு வைக்க தொடங்கினர்.
தனியார் அமைப்பு மூலம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தடை உத்தரவு பெற்று இது குறித்து எச்சரிக்கை போடு நுழைவாயில் அருகே வைக்கப்பட்டது.
இந்நிலையில் பல்வேறு இடங்களில் நடந்த பிளக்ஸ் போர்டு உயிரிழப்பு காரணமாக விதி மீறல் குறைந்து இருந்த நிலையில் தற்போது மருத்துவமனையை மறைக்கும் விதமாகவும் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் விதமாகவும் அஞ்சலி, வாழ்த்து உள்ளிட்ட பிளக்ஸ் போர்டுகள் வரிசை கட்டி உள்ளன.
இதுகுறித்து மகேஷ், உயர்நீதிமன்ற உத்தரவை மீறி வைக்கப்படும் பிளக்ஸ் போர்டுகளினால் விபத்துகள் ஏற்படவாய்ப்புள்ளது. போலீஸ், நகராட்சி அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை மதித்து மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் பிளக்ஸ் பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

