/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பஜார் வீதியில் அதிகரிக்கும் போக்குவரத்து நெருக்கடி; போலீசார் சரி செய்ய எதிர்பார்ப்பு

ADDED : செப் 01, 2024 11:57 PM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்துார் பஜார் வீதிகளில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடியை போலீசார் சரி செய்ய புதிதாக பொறுப்பேற்றுள்ள டி.எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நகரின் மையப் பகுதியில் பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை, காய்கறி மார்க்கெட், நகைக்கடை பஜார் அமைந்துள்ளதால் மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்துக்கும் அதிகளவில் உள்ளது. வடக்கு ரத வீதியில் போக்குவரத்திற்கு இடையூறாக டூவீலர்கள் நிறுத்தப்படுகிறது.
மேலும் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் நடைபாதைகள் பல அடி தூரத்திற்கு ஆக்கிரமிக்கப்பட்டு தார் ரோடு மட்டும்தான் மிச்சமாக உள்ளது.
இதனால் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், அரசு மருத்துவமனைக்கு வரும் முதியவர்கள், கர்ப்பிணிகள் சிரமமின்றி நடந்து செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ்கள் வர முடியாத அளவிற்கு கடைகளின் விளம்பர போர்டுகள், டூவீலர்கள், கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.
எனவே பெரிய மாரியம்மன் கோயில் முதல் அரசு மருத்துவமனை, நகைக்கடை பஜார், பெரிய கடை பஜார் வழியாக ஆண்டாள் கோயில் வரையிலும், பஸ் ஸ்டாண்ட் மணிக்கூண்டு முதல் கைகாட்டி கோவில் பஜார் வரை நிலவும் போக்குவரத்து நெருக்கடியை புதிதாக பொறுப்பேற்றுள்ள டி.எஸ்.பி., ராஜா நேரடி கள ஆய்வு செய்து போக்குவரத்து நெருக்கடியை சரி செய்ய வேண்டும்.