/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மே 3ல் பி.எஸ்.ஆர்., கல்லுாரியில் இந்திய தொழில் நுட்ப கல்வி சங்க மாநாடு

ADDED : மே 01, 2024 07:44 AM
சிவகாசி : சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில் இந்திய தொழில் நுட்ப கல்வி சங்கம் தமிழ்நாடு அமைப்பின் 22வது ஆண்டு மாநாடு மே 3ல் நடக்கிறது.
ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனம் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, அமெரிக்கா இன்டெல் நிறுவனம் பொறியியல் இயக்குனர் ஆனந்தன் அய்யாசாமி, டெல்லி தலைவர் பிரதாப்சின் காக ஷேப் தேசாய், தமிழ்நாடு பிரிவு தலைவர் சங்கர சுப்பிரமணியன், செயலாளர் சவுரிராஜன், துணைத் தலைவர் பாஸ்கர், மாநில தலைவர் பூர்ண பிரகாஷ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மாநாட்டில் பல்வேறு மாவட்ட பொறியியல் கல்லுாரிகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.
மாணவர்களுக்கான பேப்பர் பிரசன்டேஷன், புராஜெக்ட் டெக்னிக்கல், வினாடி வினா, பயிற்சி வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப போட்டிகள் நடக்கிறது.