/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கூட்டுறவு பட்டய பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை துவக்கம்
/
கூட்டுறவு பட்டய பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை துவக்கம்
கூட்டுறவு பட்டய பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை துவக்கம்
கூட்டுறவு பட்டய பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை துவக்கம்
ADDED : ஏப் 28, 2024 06:07 AM
விருதுநகர் ; சாத்துார் தியாகி சங்கலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024 -- 2025 கல்வியாண்டிற்கான கூட்டுறவு பட்டயப் பயிற்சி மாணவர் சேர்க்கை நடக்கிறது.
இதில் சேர விருப்பமுள்ளவர்கள் (www.tncuicm.com) என்ற இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். செப். முதல் துவங்கப்பட உள்ள பயிற்சி இரண்டு பருவ முறைகளில் நடக்கும். விண்ணப்பிப்பதற்கான தேதி, பயிற்சி கட்டண விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். பாடத்திட்டங்கள் தமிழ் வழியில் மட்டுமே நடத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு சாத்துார் தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் முதல்வரை 88071 59088 என்ற அலைபேசி எண்ணிலும், (www. icm.sattur.com) என்ற இணையத்திலும் தெரிந்து கொள்ளலாம். மேலும் 2022 ஆம் ஆண்டு முதல் அனைத்து கூட்டுறவு மேலாண்மை நிலையங்களிலும் புதிய பாடத்திட்டத்தின் படி இரண்டு பருவ முறைகளாக பயிற்சிகள் நடந்து வருகிறது.
எனவே பழைய பாடத்திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் துணைத் தேர்வு எழுத வேண்டுமாயின் 2025 டிசம்பர் தேர்வுக்குள் விண்ணப்பம் செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

