ADDED : மார் 29, 2024 05:51 AM
விருதுநகர் : விருதுநகரில் தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா என்ற தலைப்பில் லோக்சபா தேர்தலின் வரலாற்றை எடுத்துக்கூறும் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு பஸ்களை மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயசீலன் துவக்கி வைத்தார்.
2024 லோக்சபா தேர்தலை யொட்டி நுாறு சதவீதம் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்தும், பணம், பரிசு பொருட்கள் பெறாமல் நியாயமான முறையில் ஓட்டளிப்பதை வலியுறுத்தி லோக்சபா தேர்தல்களின் வரலாற்றை அனைவரும் தெரிந்து கொள்ள வடிவமைக்கப்பட்ட கண்காட்சியுடன் கூடிய விழிப்புணர்வு வாகனம் மாவட்டம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன், அரசு அலுவலர்கள், போக்குவரத்து துறை அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

