/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோமாரி தடுப்பூசி முகாம் துவக்கம்
/
கோமாரி தடுப்பூசி முகாம் துவக்கம்
ADDED : ஜூன் 11, 2024 07:23 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் தேசிய விலங்கு நோய் கட்டுப்பாடு திட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் சிவஞானபுரம் ஊராட்சியில் துவக்கப்பட்டது.
கால்நடைகளுக்கு கால், வாய் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நேற்று துவங்கி ஜூலை 10 வரை நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள 1.79 லட்சம் பசு, எருமையினங்களுக்கு தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது.
எனவே கால்நடை வளர்ப்போர் பசுக்கள், எருதுகள், எருமைகள், 4 மாதங்களுக்கு மேலான இளங்கன்றுகளுக்கு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் தியோபிலஸ் ரோஜர், கால்நடை மருத்துவர்கள், உதவி மருத்துவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.