/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செயல்படாத பம்பிங், லிப்டிங் நிலையங்கள்
/
செயல்படாத பம்பிங், லிப்டிங் நிலையங்கள்
ADDED : ஏப் 18, 2024 04:58 AM

விருதுநகர்: விருதுநகர் நகராட்சியில் பெயரளவில் செயல்படும் பம்பிங், லிப்டிங் நிலையங்களால் அடிக்கடி மேன்ஹோல் லீக் ஆகிறது.
விருதுநகர் நகராட்சியின் பாதாள சாக்கடை திட்ட பணியில் 2 பம்பிங்(கழிவுநீர் உந்துநிலையம்) நிலையங்கள், 6 லிப்டிங்(கழிவுநீரேற்று நிலையம்) நிலையங்கள் மூலம் மாத்திநாயக்கன்பட்டி ரோட்டில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு கவுசிகா நதி, குல்லுார்சந்தை அணைக்கு அனுப்பப்படுகிறது.
கழிவுநீர் பம்பிங், லிப்டிங் நிலையங்கள் பெயரளவிலும், சில இடங்களில் சுத்தமாக செயல்படாமலும் உள்ளன. இங்கு தனியார் ஒப்பந்த அமைப்பை கொண்டு பணிகள் செய்யப்படுகின்றன. இப்பணிகள் முறையாக செய்யப்படாததால் பல இடங்களில் மோட்டார் பழுது ஏற்பட்டுள்ளது.
பகுதி வாரியாக இந்த நிலையங்கள் மூலம் கழிவுகள் அனுப்பப்படாததால் பாதாளசாக்கடையில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு மேன்ஹோல் லீக் ஆகிறது. தற்போது மாலை நேரங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இன்னும் அதிகமாக மழை பெய்தால் குடியிருப்புக்குள் பாதாளசாக்கடை கழிவுநீர் கலக்கும்.
நகராட்சி மயானம், பாத்திமா நகர், புல்லலக்கோட்டை ரோடு, விஸ்வநாததாஸ் காலனி, ஆத்துமேடு, பாண்டியன் நகர் பகுதிகளில் லிப்டிங் நிலையமும், ஆத்துமேடு, கல்லுாரி ரோட்டின் மற்றொரு பகுதியில் பம்பிங் நிலையங்களும் அமைந்துள்ளன. இவற்றில் உள்ள மோட்டார் முறையாக இயக்காததால் பம்பிங் நிலைய கிணறுகள் மண்மேவி கிடக்கின்றன.
பாத்திமா நகர் லிப்டிங் நிலையத்தில் 50 எச்.பி., மோட்டார் ஓடுவதில்லை. 30 எச்.பி., மோட்டார் முறையாக இயக்கப்படுவதில்லை. இதனால் சில நாட்கள் முன் கோடை மழை பெய்த போது பாத்திமா நகர் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் வெளியேறியது. இதனால் அப்பகுதிகளில் டையரியா, டெங்கு நோய் அச்சம் ஏற்பட்டுள்ளது.
மேலும் பாத்திமா நகர் நிலையத்தில் கேட் திறந்த நிலையில் உள்ளது. கிணறுகளும் திறந்த நிலையில் உள்ளது. அருகே பஸ் ஸ்டாப் உள்ளதாலும், அங்கு குழந்தைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாலும் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆத்து மேட்டில் மோட்டார், பம்பிங் லைன் இல்லை. பாதாளசாக்கடை திட்டத்தை முறையாக செயல்படுத்தவும், பம்பிங், லிப்டிங் அறைகளை முறையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

