/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாலங்களின் கட்டுமான பணிகள் ஆய்வு
/
பாலங்களின் கட்டுமான பணிகள் ஆய்வு
ADDED : ஆக 20, 2024 06:54 AM
சிவகாசி, : சிவகாசி பகுதிகளில் நடைபெற்று வரும் உயர்மட்ட பாலங்கள் கட்டுமானப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.
தமிழகம் முழுவதிலும் பருவமழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கிராமப்புற பகுதிகளுக்கு போக்குவரத்து துண்டிக்கப்படுவதை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ரோடுகளில் உள்ள அனைத்து தரைப்பாலங்களையும், உயர்மட்ட பாலங்களாக தரம் உயர்த்திக் கட்டுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி கடந்த 3 ஆண்டுகளில் சிவகாசி வட்டத்தில் நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் உள்ள ரோடுகளில் இருந்த 26 தரைப்பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக கட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் சிவகாசி அருகே ஈஞ்சார், கொங்கலாபுரம், நாகலாபுரம், வெற்றிலையூரணி, விஜயகரிசல்குளம், நதிக்குடி, கோடாங்கிபட்டி, இடையங்குளம் உட்பட 12 தரைப்பாலங்களை அகற்றி விட்டு உயர்மட்ட பாலங்களாக அமைக்கும் கட்டுமான பணிகள் நடக்கிறது.
நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஜெயராணி, கோட்ட பொறியாளர் பாக்கியலட்சுமி நேற்று ஆய்வு செய்தனர். வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன் கட்டுமானப் பணிகளை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.