/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நான்கு வழிச்சாலை பாலப் பணிகள் ஆய்வு
/
நான்கு வழிச்சாலை பாலப் பணிகள் ஆய்வு
ADDED : ஆக 17, 2024 12:53 AM
விருதுநகர்: மதுரை - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையான இதில் புல்லலக்கோட்டை ரோடு சந்திப்பு, வடமலைக்குறிச்சி பிரிவு, கலெக்டர்அலுவலகம், ஆர்.ஆர்., நகர், சாத்துார் படந்தால் ஆகிய பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் நடந்தன.
இதை தொடர்ந்து சர்வீஸ் ரோடு, மேம்பாலங்கள் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டு வந்தன. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவின் பேரில் விருதுநகர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட நான்கு வழிச்சாலையில் 11 இடங்களில் ரூ.233 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து நேற்று காங். எம்.பி., மாணிக்கம் தாகூர், தி.மு.க., எம்.எல்.ஏ., சீனிவாசன், ஆகியோர் வடமலைக்குறிச்சி பிரிவு சர்வீஸ் ரோடு அமையும் இடம், கலெக்டர் அலுவலகம் முன்பு பகுதியை ஆய்வு செய்தனர். திட்ட இயக்குனர் கீர்த்தி பரத்வாஜ், ஆலோசனை பொறியாளர் விஜய் ஆனந்த், பராமரிப்பு மேலாளர் அசோக், நகராட்சி தலைவர் மாதவன் பங்கேற்றனர்.

