சிவகாசி: சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி முதுகலை தமிழ் துறை, தில்லி கலை இலக்கிய பேரவை, சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம், நியூசிலாந்து முத்தமிழ் சங்கம், மதுரை யாதவர் மகளிர் கல்லுாரி தமிழ் துறை, தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரி தமிழ் துறை சார்பில் சங்க கால பெண்பாற் புலவர்களின் பாடு பொருள் என்ற தலைப்பில் பன்னாட்டு ஆய்வரங்கம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் அசோக் தலைமை வகித்தார். முதுகலை தமிழ் துறை தலைவர் அருள்.மொழி துவக்கி வைத்தார். இளங்கலை தமிழ் துறை தலைவர் சந்திரகுமார் முன்னிலை வகித்தார்.
ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ்செல்வன் வரவேற்றார். இங்கிலாந்து எழுத்தாளர் குகநாதன், முனைவர் பட்ட ஆய்வாளர் மணிகண்டன், மாணவன் தங்கச்சாமி, நியூசிலாந்து பேராசிரியர் இலக்குவன் சொக்கலிங்கம், சிங்கப்பூர் ரத்தின வேங்கடேசன் பேசினர்.
நியூசிலாந்து சண்முகராசா வேலுப்பிள்ளை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இளங்கலை தமிழ் துறை உதவி பேராசிரியர் தமிழரசன் நன்றி கூறினார்.