/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பி.எஸ்.ஆர்., கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கம்
/
பி.எஸ்.ஆர்., கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கம்
ADDED : மார் 15, 2025 02:25 AM

சிவகாசி:சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி, ஐ.இ.இ.இ., சென்னை பிரிவு சார்பில் பொறியியல் துறையின் தொழில்நுட்ப வளர்ச்சி என்ற தலைப்பில் ( ஐ.சி.ஓ.ஏ.சி.டி. - 2025) சர்வதேச கருத்தரங்கம் நடந்தது.
பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி தாளாளர் சோலைச்சாமி முன்னிலை வகித்தார். கல்லுாரி இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி தலைமை வகித்தனர். முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிசாமி துவக்கி வைத்தனர். மின்னணுவியல் துறை தலைவர் வளர்மதி வரவேற்றார்.
ஐ.இ.இ.இ., சென்னை பிரிவு தலைவர் பொற்குமரன், அமெரிக்கா டெக்சாஸ் பல்கலை இயக்குனர் ஜெய் வீராசாமி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரி பேராசிரியர் வேல்முருகன், நைஜீரியா லாடோக்கே அகின்டோலா தொழில்நுட்ப பல்கலை பேராசிரியர் ஸ்டீபன் ஓலாடுண்டே ஓலாபியிசி, சீனா வென்ழோ - கீன் பல்கலை பஹா இஹ்னைனி, அமெரிக்கா கூகுள் நிறுவனம் நிவேதிதா குமாரி, ஆகியோர் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான புதிய கண்டுபிடிப்புகள் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் உள்ள சவால்கள் குறித்து விளக்கினர்.
பிரமுகர்கள் பேசுகையில், மாணவர்கள் சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்பதன் மூலம் தங்களுடைய ஆராய்ச்சி மட்டுமல்லாது இதர ஆராய்ச்சியாளர்களின் படைப்புகளையும் ஒன்று சேர்த்து பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும். இந்த கண்டுபிடிப்புகள் மூலமாக மாணவர்கள் தொழில் முனைவோராக மாற மத்திய, மாநில அரசு நிதி உதவி வழங்கி வருகிறது என்றனர்.
அமெரிக்கா, மலேசியா, வங்கதேசம் உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் இருந்தும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள பொறியியல் கல்லுாரிகளில் இருந்தும் 1200க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் பெறப்பட்டு அதில் 150 ஆராய்ச்சி கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன. ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகம் கணிப்பொறியியல் துறை தலைவர் ராமதிலகம், பேராசிரியர் பாலசுப்பிரமணியன், மின்னியல் துறை தலைவர் முனிராஜ் செய்தனர்.