/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பிரதமர் மோடி, அமித்ஷா கட்டளையால் விக்கிரவாண்டியில் அ.தி.மு.க., விலகல் மாணிக்கம் தாகூர் எம்.பி., பேட்டி

ADDED : ஜூன் 18, 2024 06:11 AM
விருதுநகர், : விக்கிரவாண்டி சட்டசபை தேர்தலில் பிரதமர்மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின்கட்டளையை ஏற்று அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி போட்டியிடாமல் விலகியுள்ளார், என மாணிக்கம் தாகூர் எம்.பி, தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
சிவகாசி பட்டாசு தொழில் மீட்டெடுப்பது, சிறு வியாபாரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஜி.எஸ்.டி., குறைப்பது குறித்து லோக்சபாவில் குரல் எழுப்பப்படும்.
தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை பதவி ஏற்ற பின், ரவுடிகளை கட்சியில் இணைத்து ரவுடிச அரசியலை செய்கின்றனர். காங்., தமிழக தலைவர் செல்வப் பெருந்தகை, ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன் ஒரே கருத்துக்களை தெரிவித்தனர். சொல்கின்ற விதம் மட்டுமே மாறியுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட காங்., தலைவர்ஜெயக்குமார் மரண வழக்கில் நேர்மையான சி.பி.சி.ஐ.டி., அதிகாரிகள்மூலம் விசாரணை நடக்கிறது. விரைவில் குற்றவாளிகள் கைதாவர்கள் என்ற நம்பிக்கை உள்ளது, என்றார்.
முன்னதாக விருதுநகர் பெரிய பள்ளிவாசல்மைதானத்தில் நடந்த பக்ரீத் தொழுகையில் எம்.பி., மாணிக்கம் தாகூர், எம்.எல்.ஏ., சீனிவாசன், நகராட்சி தலைவர் மாதவன் உட்பட பலர் பங்கேற்றனர். அதன் பின் விருதுநகர், அதனை சுற்றிய பகுதிகளில் லோக்சபா தேர்தலில் ஓட்டளித்து வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றிதெரிவித்தார்.