/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விலை ஆதரவு திட்டத்தில் பயன்பெற அழைப்பு
/
விலை ஆதரவு திட்டத்தில் பயன்பெற அழைப்பு
ADDED : ஆக 04, 2024 06:25 AM
விருதுநகர் : விருதுநகர் விற்பனை குழு செயலாளர் வேலுச்சாமி கூறியதாவது:
மத்திய அரசின் குறைந்த விலை ஆதார திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் காரீப், ராபி பருவத்தில் நாபட் நிறுவனத்தின் மூலம் உளுந்து, பாசிப்பயறு, கொப்பரை தேங்காய் ஆகியவை குறைந்தபட்ச ஆதார விலையில் ராஜபாளையம், சாத்துார், அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொள்முதல் செய்யப்படுகிறது.
விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். அதே போல் விருதுநகர், ராஜபாளையம், சாத்துார், அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் செயல்படும் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் மூலம் மின்னணு பரிவர்த்தனை மூலம் விளைபொருட்களை விற்பனை செய்து கூடுதல் லாபம் பெறலாம். இவை தவிர பொருளீட்டு கடன் வசதியை பயன்படுத்தியும் விவசாயிகள் பயனடையலாம், என்றார்.