/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோடை கால பயிற்சி வகுப்பு முகாம்களில் பங்கேற்க அழைப்பு
/
கோடை கால பயிற்சி வகுப்பு முகாம்களில் பங்கேற்க அழைப்பு
கோடை கால பயிற்சி வகுப்பு முகாம்களில் பங்கேற்க அழைப்பு
கோடை கால பயிற்சி வகுப்பு முகாம்களில் பங்கேற்க அழைப்பு
ADDED : ஏப் 27, 2024 03:53 AM
விருதுநகர்: விருதுநகரில் மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் கோைடை கால பயிற்சி வகுப்பு முகாம்களில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும், பள்ளி மாணவர்களுக்கான, ஒன்றிய அளவிலான கோடைகால பயிற்சி முகாம் அந்தந்த வட்டார வள மையத்தில் வைத்து, நடைபெற உள்ளது.
மே 1ல் ஓவிய கலைகள் பயில்வோம் என்ற தலைப்பிலும், மே 2ல் தனித்தமிழ் அறிவோம் என்ற தலைப்பிலும் 3ல் விருதுநகர் மாவட்டம் ஓர் அறிமுகம் என்ற தலைப்பிலும், 4ல் போஸ்டர் தயாரித்தல் இணைய வழி பயிற்சியும், 6ல் கதை சொல்லி என்ற தலைப்பிலும், 7ல் புத்தகம் பேசுதல் என்ற தலைப்பிலும், 8ல் நாட்டுப்புற கலைகள் பயிற்சியும், 9ல் உணவே மருந்து என்ற தலைப்பிலும், 10ல் உபயோகமற்ற பொருட்களில் இருந்து கலை பொருட்கள் தயாரித்தல் என்ற தலைப்பிலும், 11ல் மெஹந்தி வரைதல், களிமண் பொருட்கள் தயாரித்தல் என்ற தலைப்பிலும் கோடைகால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். முதலில் முன்பதிவு செய்யும் 50 மாணவர்கள் மட்டுமே பயிற்சியில் கலந்து கொள்ள முடியும்.
ஏப்.30க்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். விவரங்களுக்கு 98437- 21133என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.

