/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாநில வினாடி வினா போட்டிக்கு அழைப்பு
/
மாநில வினாடி வினா போட்டிக்கு அழைப்பு
ADDED : ஆக 08, 2024 04:16 AM
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:
மாவட்ட நிர்வாகம் சார்பில்3வது புத்தக திருவிழாவை முன்னிட்டு, மாநில அளவிலான வினாடி வினா போட்டி நடக்கிறது.
இதில் தமிழகத்தை சேர்ந்த போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பங்கேற்கலாம்.
அவர்கள் ஏதேனும் ஒரு போட்டித் தேர்விலாவது பங்கேற்று இருக்க வேண்டும். அத்தகைய தேர்வுக்கான அனுமதி சீட்டினை கொண்டு ஆர்வமுள்ள மாணவர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தினை http://forms.gle/CN4ey1H6Lqsdyex18 நிரப்ப வேண்டும்.
மாணவர்கள் இப்போட்டியில் குழுக்களாக கலந்து கொள்ளலாம். ஒரு குழுவில் மூன்று நபர்கள் பங்கேற்கலாம்.
இப்போட்டி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி கலையரங்கில் ஆக. 18ல் நடக்கிறது.
ஆக.15 விண்ணப்பிக்க கடைசி நாள்.
முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2ம் பரிசு ரூ.75 ஆயிரம், 3வது பரிசு ரூ.50 ஆயிரம் அளிக்கப்படும். விவரங்களுக்கு 80724 91078 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம், என்றார்.