/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வண்டல் மண் எடுப்பதில் முறைகேடு; தவிர்க்க நடவடிக்கை அவசியம்
/
வண்டல் மண் எடுப்பதில் முறைகேடு; தவிர்க்க நடவடிக்கை அவசியம்
வண்டல் மண் எடுப்பதில் முறைகேடு; தவிர்க்க நடவடிக்கை அவசியம்
வண்டல் மண் எடுப்பதில் முறைகேடு; தவிர்க்க நடவடிக்கை அவசியம்
ADDED : ஆக 30, 2024 05:45 AM
ராஜபாளையம் : ராஜபாளையம் கண்மாய் பகுதிகளில் வண்டல் மண் எடுப்பதில் முறைகேடு நடக்காமல் தடுக்க கனிமவளத்துறையினர், போலீசார், வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் விரும்புகின்றனர்.
விவசாயிகளின் விளை நிலங்களை சமப்படுத்துவதற்காகவும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கும் கண்மாய்களில் வண்டல் மண் எடுக்க கனிம வளத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் மூலம் அனுமதி வழங்கப்படுகிறது.
விவசாய நிலங்கள் சமப்படுத்துவதற்கு கண்மாய்களில் இருந்து மண் அள்ள விவசாயிகள் போதிய இயந்திரங்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஏற்பாடு செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் மண்பாண்ட தொழிலாளர்களின் பெயரில் ரியல் எஸ்டேட் செய்பவர்கள் பிளாட்களில் உள்ள பள்ளங்கள், வியாபார ரீதியாக செயல்படும் செங்கல் சூளைகளுக்கு மண் அருளப்பட்டு வருகிறது.
ராஜபாளையம் தாலுகா நச்சாடைப்பேரி கண்மாய், சேத்துார் வாழவந்தான் குளம், தேவதானம் வாண்டையார்குளம் கண்மாய் உள்ளிட்ட பகுதிகளில் செம்மண் வளம் நிறைந்த இடங்களாக பார்த்து அனுமதிக்கப்பட்ட அளவைவிட 10 முதல் 15 அடி வரை மன்னரும் இயந்திரம் மூலம் தோண்டி எடுத்து டிராக்டர்களில் அள்ளப்பட்டு வருகிறது.
அரசியல்வாதிகளின் தலையீட்டில் வருவாய்த்துறை போலீசாரின் உதவியுடன் நடைபெறும் மண் கொள்ளையால் பாசன பகுதிக்கான நீர் வெளியேறும் பகுதி பாதிப்பதுடன், நீர் இருந்தும் காட்சி பொருளாக மாறி வருகிறது. விவசாயிகளை பாதிக்கும் இச்செயலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

