/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் நகராட்சியோடு கூரைக்குண்டு, ரோசல்பட்டி ஊராட்சிகளை இணைக்க முடிவு

ADDED : ஆக 02, 2024 06:41 AM
விருதுநகர் : விருதுநகர் நகராட்சியோடு கூரைக்குண்டு, ரோசல்பட்டி ஊராட்சிகளை இணைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
விருதுநகர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. நகராட்சியை யொட்டி உள்ள ரோசல்பட்டி ஊராட்சி பாண்டியன் நகர், அண்ணாநகர், கூரைக்குண்டு ஊராட்சியில் உள்ள சூலக்கரைமேடு, கலெக்டர் அலுவலகம், யானைக்குழாய் பகுதி, அதே போல் சிவஞானபுரத்தில் உள்ள லெட்சுமி நகர், என்.ஜி.ஓ., காலனி ஆகிய பகுதிகளை இணைக்க கோரி 2010 முதலே தீர்மானம் போட்டு விரிவாக்கம் தொடர்பான இந்த கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில்நகராட்சியை யொட்டி உள்ள கூரைக்குண்டு, ரோசல்பட்டி ஊராட்சிகளை இணைக்க கருத்துரு தயார் செய்ய சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் அறிவுறுத்தியதாக கூறி மாவட்ட நிர்வாகம் இரு ஊராட்சிகளின் அடிப்படை விவரங்கள் கோரியும், கருத்துரு, தீர்மானம் கோரியும் கடிதம் அனுப்பி உள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே 80 ஆயிரம் மக்கள் தொகையோடு தேர்வு நிலை நகராட்சியாக உள்ள விருதுநகருக்கு கூடுதலாக இந்த இரு ஊராட்சிகளையும் இணைத்தால் சிறப்பு நிலை நகராட்சியாக வாய்ப்புள்ளது. இதன் மூலம் வருவாய் அதிகரிப்பதுடன் வளர்ச்சி பணிகள் வேகமெடுக்கவும் செய்யும்.