/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா
/
இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா
இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா
இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா
ADDED : ஆக 17, 2024 12:56 AM

சாத்துார்: சாத்துார் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி மாதம் கடைசி வெள்ளி பெருந்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி, தை, பங்குனி மாதங்களின் கடைசி வெள்ளிக்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆடி மாதம் கடைசி வெள்ளி திருவிழா நேற்று நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் சூழ உற்ஸவ மாரியம்மன் வீதி உலா வருதல் நேற்று நடந்தது.முன்னதாக உற்சவ அம்மனுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது.
பின்னர் அம்மன் ரிஷபவாகனத்தில் மதியம் 2:45 மணிக்கு வீதியுலா நடந்தது. முக்கிய வீதிகள்வழியாக வலம் வந்த அம்மன் மண்டகப்படியார்கள் அமைத்திருந்த திருக் கண்ணில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும்,பொங்கல் வைத்தும் முடி காணிக்கை செலுத்தியும், அக்னி சட்டி, ஆயிரம்கண் பானை எடுத்தும் அம்மனை வழிபட்டனர்.
கோயில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி, உதவி ஆணையர் (கூ.பொ) சுரேஷ், தலைமையில் இந்து சமய அறநிலையை துறை அதிகாரிகள் விழாவிற்கானஏற்பாடுகளை செய்திருந்தனர்.
டி.எஸ்.பி. சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.