/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இருக்கன்குடி கோயில் பாதயாத்திரை நடைபாதை பேவர் பிளாக் பதிக்கும் பணி தீவிரம்
/
இருக்கன்குடி கோயில் பாதயாத்திரை நடைபாதை பேவர் பிளாக் பதிக்கும் பணி தீவிரம்
இருக்கன்குடி கோயில் பாதயாத்திரை நடைபாதை பேவர் பிளாக் பதிக்கும் பணி தீவிரம்
இருக்கன்குடி கோயில் பாதயாத்திரை நடைபாதை பேவர் பிளாக் பதிக்கும் பணி தீவிரம்
ADDED : ஏப் 25, 2024 04:43 AM
சாத்துார், : இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாத யாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கென பாதையில் பேவர் பிளாக் பதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு ஆடி தை மாதங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் பாதயாத் திரையாக நடந்து வந்து தரிசனம் செய்வது வழக்கம். சாத்துார் வழியாக இருக்கன்குடி கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் பாதுகாப்பாக நடந்து செல்வதற்கு வசதியாக தனி நடைமேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நடைமேடையில் பக்தர்களில் ஓய்வு எடுப்பதற்காக இருக்கை வசதிகளும் நிழலில் நடந்து செல்வதற்கு வசதியாக மேற்கூறையும் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளும் செய்து தரப்படுகிறது.
இருக்கன்குடி கோயில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழுத் தலைவர் ராமமூர்த்தி பூஜாரி கூறியதாவது:
சாத்துார் எல்லையில் இருந்து இருக்கன்குடி ஆட்டுப் பண்ணை வரையில் ேபவர் பிளாக் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடிக்க இந்து சமய அறநிலைத்துறை, பொதுப்பணித்துறை, தமிழக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பணிகளை முடுக்கி விட்டு உள்ளனர்.
இதனால் இந்த ஆண்டிலேயே பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும், என்றார்.

