ADDED : மே 31, 2024 06:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி : காரியாபட்டி துலுக்கன்குளம் முனியப்பசாமி கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.
மதுரை, சிவகங்கை ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 360 காளைகள் வந்தன. 200 மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
வீரர்களுக்கும் காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. சீறிப்பாய்ந்து காளைகளை தீரத்துடன் மாடுபிடி வீரர்கள் அடக்கினர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் அண்டா, மின்விசிறி, நாற்காலி, குத்துவிளக்கு, ரொக்கப்பணம், டேபிள், சேர் என பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
நூறுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.