ADDED : ஏப் 27, 2024 03:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் திரு.வி.க., தெருவை சேர்ந்தவர் கோதையாண்டாள் 72. இவரது கணவர் கண்ணன் பி.எஸ்.என்.எல்.,ல் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
மகன், மகள்கள் திருமணமாகி வெளியூர், வெளிநாட்டில் வசிக்கின்றனர்.
கணவர் நேற்று முன்தினம் திருச்சியில் உள்ள மகன் வீட்டிற்கு சென்று விட்டார்.
நேற்று காலை 6:00 மணிக்கு கோதையாண்டாள்வாசல் தெளிக்க பெருக்கி கொண்டிருந்த போது டூவீலரில் வந்த இருவர் எதிர்பாராத நேரத்தில் கழுத்தில் அணிந்திருந்த நான்கரை பவுன் தங்க சங்கலி, மாங்கல்யம் ஆகியவற்றை பறித்து சென்றனர்.
சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

