/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தேரோட்டத்தில் லட்டு வாங்கிய பெண்களிடம் நகை திருட்டு
/
தேரோட்டத்தில் லட்டு வாங்கிய பெண்களிடம் நகை திருட்டு
தேரோட்டத்தில் லட்டு வாங்கிய பெண்களிடம் நகை திருட்டு
தேரோட்டத்தில் லட்டு வாங்கிய பெண்களிடம் நகை திருட்டு
ADDED : செப் 03, 2024 05:52 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தில் தனி நபர்கள் லட்டு வழங்கிய கூட்டத்தில் 5 பெண்களிடம் 18 பவுன் நகை திருடப்பட்ட சம்பவத்தில் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த அஜித் 29, அனு 22, ஆகியோரிடம் ஸ்ரீவில்லிபுத்தூர் தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆக.7 ல் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தின் போது வடக்கு ரதவீதியில் சிலர் லட்டு வழங்கினர். அதை முண்டியத்து வாங்க சென்ற ராஜபாளையம் சத்திரப்பட்டியை சேர்ந்த நாயகத்திடம் 4 பவுன், ராஜபாளையம் லட்சுமியிடம் 3 பவுன், சிவகாசி மகாலட்சுமியிடம் 3 பவுன், ஸ்ரீவில்லிபுத்தூர் பரமேஸ்வரியிடம் 5 பவுன், மாரியம்மாளிடம் 3 பவுன் என மொத்தம் 18 பவுன் செயின்கள் திருடப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார், சிசிடிவி பதிவு மூலம் விசாரித்துவந்தனர். இதே போல் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடந்த சங்கரன் நாராயணன் கோயில் கும்பாபிஷேகத்திலும் பல பெண்களிடம் நகை பறிப்பு நடந்துள்ளது. இவ்விரு சம்பவங்கள் தொடர்பாக தமிழகம் முழுவதும் குற்றப்பிரிவு போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த அஜித் 29, அனு 22, ஆகியோரை பிடித்து ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை பூர்வீகமாக கொண்ட இவர்கள், தற்போது பாலக்காட்டில் வசிப்பதும், சொகுசு காரில் கோயில் திருவிழாக்கள் நடக்கும் ஊர்களுக்கு சென்று நகை திருட்டில் ஈடுபடுவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து தமிழகத்தின் மற்ற கோவில் விழாக்களிலும் நடந்த நகை பறிப்பு சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.