/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., பாலகிருஷ்ணா கல்லுாரியில் கபடி போட்டி
/
ஸ்ரீவி., பாலகிருஷ்ணா கல்லுாரியில் கபடி போட்டி
ADDED : மே 26, 2024 03:33 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூர் மொட்டமலை ஸ்ரீ பாலகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் 19 வயதுக்கு உட்பட்ட பள்ளி ,கல்லூரி மாணவர்களுக்கான 15வது ஆண்டு கபடி போட்டி நடந்தது.
கல்லூரி தாளாளர் மாடசாமி தலைமை வகித்தார். முதல்வர் அருண் முன்னிலை வகித்தார். 30க்கும் மேற்பட்ட அணியினர் பங்கேற்றனர். இதில் மம்சாபுரம் ஆசை கபடி குழு முதலிடம் பெற்று ரூ. 7 ஆயிரம் ரொக்கப் பரிசையும், பாலகிருஷ்ணா கலை கல்லூரி அணியினர் இரண்டாமிடம் பெற்று ரூ. 4 ஆயிரம் ரொக்கப் பரிசினையும், மூன்றாம் மற்றும் நான்காம் பரிசை தளவாய்புரம் டி.என். பி.எம்.எம். மேல்நிலைப்பள்ளி அணியும் பெற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு கல்லூரி செயலாளர் டாக்டர் சுரேஷ், சேர்மன் மாடசாமி பரிசுகளை வழங்கி பாராட்டினர். விளையாட்டு ஆசிரியர் ஆறுமுகச்சாமி நன்றி கூறினார்.