நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை,: அருப்புக்கோட்டை திருச்சுழி ரோட்டில் உள்ள மத்திய அரசின் சர்வோதய சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட காதிபவன் திறப்பு விழா நடந்தது.
காதி, கிராம தொழில்கள் ஆணையத்தின் தலைவர் மனோஜ்குமார் திறந்து வைத்தார்.
அங்கு விற்கப்படும் புடவைகள் அதன் விலைகள், தரம் ஆகியவற்றையும் அங்குள்ள பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
உடன் காதி டெபுடி சி.இ.ஓ., நல்லமுத்து, மதுரை மண்டல அலுவலக இயக்குனர் செந்தில்ராமசாமி, சென்னை மாநில அலுவலக இயக்குனர் சுரேஷ் குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.