/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கள்ளச்சாராய மரணம்: தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
/
கள்ளச்சாராய மரணம்: தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
கள்ளச்சாராய மரணம்: தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
கள்ளச்சாராய மரணம்: தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 25, 2024 12:10 AM

விருதுநகர் : கள்ளச்சாராய மரணத்தை கண்டித்து விருதுநகரில் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்து பேசியதாவது: விடியா தி.மு.க., ஆட்சியில் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின் கள்ளச்சாராய சாவு தொடர்ந்து நடக்கிறது. தமிழக மக்கள் கண்ணீர் அவர்களுக்கு தெரியவில்லை. இன்று உலகமே உற்றுபார்க்கிற வகையில் கள்ளச்சாராய மரணங்கள் நடந்துள்ளன. கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் என்ற ஊரே இன்று சுடுகாடு போலாகி உள்ளது. இதை கண்டித்து நடவடிக்கை எடுக்காத, சம்மந்தப்பட்ட சாராய வியாபாரிகளை கண்டுபிடிக்க தவறிய ஸ்டாலின் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும், என்றார். எம்.எல்.ஏ., மான்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரபிரபா, முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்தி, மாவட்ட கவுன்சிலர் மச்சராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டம் துவங்கும் முன் காரில் இருந்த கட்சியினரை போலீசார் அனுமதிக்கவில்லை என்று கூறி ரோடு மறியல் செய்ய போவதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் கோபத்துடன் எச்சரித்தார். பின் கட்சியினர் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.
சாத்துாரில் விருதுநகர் கிழக்கு மாவட்டஅ.தி.மு.க சார்பில் நடந்தஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் சிவசாமி, சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். மாநிலஜெ., பேரவை துணைச் செயலாளர் சேதுராமானுஜம், சாத்துார் நகரச் செயலாளர் இளங்கோவன் ஒன்றிய செயலாளர் சண்முககனி வரவேற்றனர்.
வெம்பக்கோட்டை, அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடி, பகுதியைச் சேர்ந்தநகரஒன்றிய நிர்வாகிகள் பிறஅணி நிர்வாகிகள் தொண்டர்கள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.