/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா
/
மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா
ADDED : ஜூலை 16, 2024 04:28 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் 122 வது பிறந்த நாள் விழாவில் திரளானோர் கலந்து கொண்டனர்.
விருதுநகரில் அவரது நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு கலெக்டர் ஜெயசீலன் மரியாதை செலுத்தினார். இவருடன் எஸ்.பி., பெரோஸ் கான் அப்துல்லா பங்கேற்றார். அதே போல எம்.பி., மாணிக்கம் தாகூர், பா.ஜ., கிழக்கு மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் மரியாதை செலுத்தினர்.
விருதுநகர் - காமராஜ் நுாற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில் உள்ள உருவச்சிலைக்கு அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். எம்.எல்.ஏ., சீனிவாசன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், விருதுநகர் நகராட்சித் தலைவர் மாதவன், அருப்புக்கோட்டை முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவர் சுப்பாராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, பாண்டியராஜன் தலைமையில் கட்சியினர் மரியாதை செலுத்தினர். விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மக்கள் நீதி மய்யம் மத்திய மாவட்டச் செயலாளர் காளிதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
* விருதுநகர் நோபிள் இன்டர்நேசனல் பப்ளிக் பள்ளி, மகளிர் கலை கல்லுாரி சார்பில் கருமாதி மடத்தில் இருந்து காமராஜர் இல்லம் வரை ஊர்வலமாக சென்று மரியாதை செலுத்தினர். கல்வி குழும தலைவர் ஜெரால்டு ஞானரத்தினம் தலைமை வகித்தார். குழும செயலாளர் வெர்ஜின் இனிகோ முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் வேல்மணி உட்பட பள்ளி, கல்லுாரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
* விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவஹர் பேசினார். நிர்வாக குழு தலைவர் பழனிச்சாமி செயலாளர் கோவிந்தராஜபெருமாள், பொருளாளர் கூட்டுச்செயலாளர் லதா, உப தலைவர் சிவபால ஈஸ்வரி, முதல்வர் சிந்தனா, ரவிசங்கர் பங்கேற்றனர்.
சிவகாசி
* சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் கல்வி வட்டம் சார்பில் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டி நடந்தது. கல்லுாரி தலைவர் திலகவதி, செயலர் அருணா புரவலர்களாக வழி நடத்தினர். கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் தலைமை வகித்தார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து நடந்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில்உதவி பேராசிரியர் செல்வ ஈஸ்வரி வரவேற்றார். இணை பேராசிரியர் உமா சங்கரி பேசினார். உதவி பேராசிரியர் முத்து காயத்ரி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்வி வட்ட ஒருங்கிணைப்பாளர் வளர்மதி செய்தார்.
திருத்தங்கல் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஐம்பெரும் பள்ளிகளின் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
* ம.தி.மு.க., சார்பில் நடந்த விழாவில் ம.தி.மு.க., மாநில அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் குமரேசன், கவுன்சிலர் ராஜேஷ் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
* பா.ஜ., வடக்கு ஒன்றியம் சார்பில் நடந்த விழாவில் ஒன்றிய தலைவர் சிவ செல்வராஜ் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது மாவட்ட துணை தலைவர் மலர்விழி, செயற்குழு உறுப்பினர் விஜயராகவன், ஒன்றிய பொதுச் செயலாளர் முனீஸ் குமார், ஜெயக்கொடி, பாண்டியன், கணேசன் கலந்து கொண்டனர்.
* பா.ஜ., மாவட்ட அரசு தொடர்பு பிரிவு சார்பில் நடந்த விழாவில் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், நகர தலைவர் பழனிச்சாமி, வர்த்தக பிரிவு தலைவர் தங்கராஜன், ஆர்.எஸ்.எஸ்.,மாநில நிர்வாகி சிவலிங்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
* சிவகாசி விளாம்பட்டி ஏ.வி.எம்.மாரிமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் விளாம்பட்டி நாடார் உறவின்முறை தலைவர் பாலகுருசாமி தலைமை வகித்தார். ஏ.வி.எம்.எம்., எடிசன் நாடார் துவக்கப்பள்ளி தாளாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர் சங்க தலைவர் ரெங்கசாமி, ஆலோசகர்கள் தர்மராஜூ, ஓய்வு தலைமை ஆசிரியர் காமராஜ் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியை இந்திரா வரவேற்றார். மாரனேரியை சேர்ந்த ராசு வாத்தியாரின் மனைவிராஜசுலோச்சனா தேசியக் கொடியை ஏற்றினார். காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. முன்னாள் மாணவர் குணசேகரன் 'ராசு வாத்தியார் அறக்கட்டளை' மூலம் ரூ.1,03,700 லட்சம் கல்வி உதவி தொகை வழங்கினார்.
ஸ்ரீவில்லிபுத்துார்
ஸ்ரீவில்லிபுத்துார் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ.பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. தாளாளர் குருவலிங்கம் தலைமை வகித்தார். பள்ளி அறங்காவலர் சித்ரா மகேஸ்வரி முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
ராஜபாளையம்
* ராஜபாளையம் அன்னப்ப ராஜா மேல்நிலை பள்ளி செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை விதித்தார். தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார்.
பி.ஏ.சி.எம் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாரிமுத்து காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தார். போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர் அய்யனார் மாணவர்களிடையே விளக்கி பேசினார்.
*ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் பள்ளி செயலர் சந்திரன் ராஜா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பாலகுருசாமி பங்கேற்று பேசினார். முதல்வர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். துணை முதல்வர் முருகன் நன்றி கூறினார்.
* ராஜபாளையம் சிவகாமி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம் சார்பில் போட்டிகள் நடத்தி ஏ.கே மருத்துவமனை டாக்டர் ஆனந்த கிருஷ்ணன் பரிசு வழங்கினார். முன்னாள் தலைமை ஆசிரியர் ராமத்திலகம், கீதா பேசினர். பள்ளிச் செயலர் சாந்தகுமாரி நன்றி கூறினார்.
சாத்துார்
* சாத்துார் மேட்டமலை பி.எஸ்.என்.எல்.பி.எட்., கல்லுாரியில் காமராஜர் பிறந்த தின விழா நடந்தது தலைவர் ராஜூ தலைமை வகித்தார். செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் ராஜேஸ்வரி வரவேற்றார் மாணவ ஆசிரியர் கார்த்திக்குமார் காமராஜரின் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினார். மாணவ ஆசிரியர் வித்தியா நன்றி கூறினார்.
* சாத்துார் நகர வட்டார காங்., சார்பில் தலைவர் அய்யப்பன், மாவட்ட பொதுச் செயலாளர் ஜோதி நிவாஸ், பொது குழு உறுப்பினர் ஜி.வி.கார்த்திக், ஆகியோர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
* சாத்துார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் சந்திரன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
* சாத்துார் நகர அ.தி.மு.க. சார்பில் நகரச் செயலாளர் இளங்கோவன் தலைமையில் அக்கட்சியினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.