/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோயில் அருகே குப்பை அசுத்தமாகும் கண்மாய்
/
கோயில் அருகே குப்பை அசுத்தமாகும் கண்மாய்
ADDED : ஜூலை 09, 2024 04:34 AM

சேத்துார்:' கோயில் அருகே குப்பை கொட்டுவதால் பக்தர்கள் முகம் சுளிப்பிற்கு ஆளாவதோடு கண்மாயும் அசுத்தம் அடைந்து வருவதை சரி செய்ய குடியிருப்பு வாசிகள் எதிர்பார்த்துள்ளனர்.
முகவூர் அருகே முத்துசாமிபுரம் ஊராட்சி காளியம்மன் கோயில் தெரு, சாலியர் தெரு அருகே ஜீவ சமாது, ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இதன் அருகே செங்குளம் கண்மாய் ஆரம்பப் பகுதியும் உள்ளது.
கோயில் அருகே குவிக்கப்படும் குப்பையால் இப்பகுதியை கடக்கும் மாணவர்கள், குடியிருப்பு வாசிகள், கோயிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுளிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.
இப்பகுதியில் ஆண்களுக்கான சுகாதார வளாகம் இல்லாததால் ரோட்டோரத்தையே திறந்தவெளியாக பயன்படுத்தும் அவலமும் இருந்து வருகிறது.
கணேசன்: சேத்துாரில்இருந்தும், அருகில் உள்ள பொட்டல் பகுதியில் இருந்து வரும் மாணவர்கள்முகவூரில் உள்ள மேல்நிலைப் பள்ளிக்கு மெயின் பாதையாக உபயோகப்படுத்துகின்றனர். இங்கும், அருகில் உள்ளவி.ஏ.ஓ., அலுவலகம் முன்பும் பிளாஸ்டிக் குப்பையும் கழிவுகளையும் குவிப்பதால் சுகாதாரத் கேடு ஏற்படுகிறது. மேலும் குப்பை காற்றில் பறந்து கண்மாயில் விழுந்து தண்ணீர் மாசடைகிறது.
கோயில் அருகே இது போன்ற துர்நாற்ற பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பதோடு ஊராட்சி நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆண்களுக்கான சுகாதார வளாகம் ஏற்படுத்த வேண்டும்.