/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
/
காரியாபட்டி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
ADDED : ஆக 18, 2024 05:04 AM
காரியாபட்டி, : காரியாபட்டி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் முத்துமாரி தலைமையில் துணைத் தலைவர் ராஜேந்திரன், பி.டி.ஓ.,கள் வாசுகி, போத்திராஜன் முன்னிலையில் நடந்தது.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
நாகர் பாண்டீஸ்வரி, அ.தி.மு.க.,: முடுக்கன்குளம் பச்சேரியில் ஊரணி தூர்வார்பட்டது. டெண்டர் விட்டது குறித்து தகவல் இல்லை. அது மட்டுமல்ல முறைப்படி தூர்வாரப்பட்டதா. அதிகாரிகள் ஆய்வு செய்தீர்களா. சரி வர தூர்வார வில்லை.
பி.டி.ஓ.,: முறைப்படி ஆய்வு செய்யப்படும். குறைகள் இருக்கும் பட்சத்தில் சரி செய்யப்படும்.
உமையீஸ்வரி, தி.மு.க.,: அச்சங்குளத்தில் மயானத்திற்கு ரோடு, அடிகுழாய் வசதி கிடையாது. பாஞ்சார் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து மகளிர் குளியல் தொட்டி கட்ட வேண்டும்.
பி.டி.ஓ.,: விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

