/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காசி விஸ்வநாதர் கோயில் தேரோட்டம்
/
காசி விஸ்வநாதர் கோயில் தேரோட்டம்
ADDED : ஜூன் 15, 2024 07:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி காசி விஸ்வநாதர் கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவ திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
சிவகாசி காசி விஸ்வநாதர் கோயில் வைகாசி பிரம்மோற்ஸவ திருவிழா ஜூன் 6ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து 11 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பிரம்மோற்ஸவ விழாவில் தினசரி அம்மன், சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருவர்.
இரு நாட்களுக்கு முன்பு, தபசு காட்சி, விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது.
நேற்று தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.