நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்:துாத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு சேர்ந்தவர் பசுபதிராஜ், 58. இவரது மருமகன் பூவேந்திரன், 32. செப். 3 இரவு 11:00 மணிக்கு டூவீலரில் (இருவரும் ஹெல்மெட் அணியவில்லை) சாத்துார் வந்தனர். என்.வெங்கடேஷ்வரபுரம் விலக்கருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் ரோட்டின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
இருவரும் படுகாயம் அடைந்தனர். நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணிக்கு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியில் பசுபதிராஜ் பலியானார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.